Untitled Document
October 22, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பேரணிக்கு ஏற்பாடு!
[Friday 2017-10-20 07:00]

தமிழ் அரசியல் கைதிகள் மூவர் உண்ணா விரதம் மேற்கொண்டு வருகின்றமை தொடர்பில் அரசும், தமிழ்த் தலைமைகளும் பாராமுகமாகவே இருந்து வருதாக கிழக்குப் பல்கலைக்கழக கலைப் பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.


யாழ். மாவட்ட அபிவிருத்திக்கு உதவ நோர்வே இணக்கம்! Top News
[Friday 2017-10-20 07:00]

யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு தவிர்ந்த ஏனைய மக்களுக்கும் வாழ்வாதார திட்டங்களை வழங்குமாறு நோர்வே நாட்டின் இலங்கைக்கான தூதுவர் தோர்ப்ஜோர்ன் கௌசடாதிடம் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


ரயிலில் செல்பி எடுத்த 24 பேர் 8 மாதங்களில் பலி!
[Friday 2017-10-20 07:00]

கடந்த 8 மாத காலப் பகுதியில் ரயில் நிலையங்களிலும் ரயில் பயணங்களின் போதும் செல்பி எடுத்துக்கொண்ட 24 பேர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்ததாக வீதி பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இவர்களில் அதிகமானோர் இளைஞர் யுவதிகளாவர்.


கனகராயன்குளத்தில் 10 கிலோ கஞ்சாவுடன் நால்வர் கைது!
[Friday 2017-10-20 07:00]

வவுனியா- கனகராயன்குளம் பகுதியில் நேற்று பல லட்சம் பெறுமதியுடைய கேரளா கஞ்சாவுடன் நால்வரை பொலிஸார் கைது செய்தனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணத்திலிருந்து தென்பகுதி நோக்கி பயணித்த சிறிய ரக காரை கனகராயன்குளம் பகுதியில் சோதனையிட்ட சமயத்தில் வாகனத்திலிருந்து 9 கிலோ 732கிராம் கேரளா கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.


மன்னாரில் புதிய சிறைக்கூடம்!
[Friday 2017-10-20 07:00]

மன்னாரில் சிறைக்கூடம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் மன்னாரில் சிறைக்கூடம் ஒன்றை அமைப்பதற்கான பத்திரத்தை அமைச்சர் சுவாமிநாதன் சமர்ப்பித்திருந்தார்.


புதிய அரசியலமைப்பு குறித்த சங்க சபாவின் எதிர்ப்பு - ரணில் ஆவேசம்! Top News
[Thursday 2017-10-19 18:00]

மல்வத்த, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயகக்கர்கள் பங்கேற்காத கூட்டத்திலேயே புதிய அரசியலமைப்போ அல்லது தற்போதைய அரசியலமைப்பில் திருத்தமோ அவசியம் இல்லை என்று தீர்மானம் எடுக்கப்பட்டதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன் நினைவு நிகழ்வு! Top News
[Thursday 2017-10-19 18:00]

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 17ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கு அருகிலுள்ள ஊடகவியலாளர் பொது நினைவுத்தூபியில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நிமலராஜனின் படத்துக்கு மலர் மாலையிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


கோத்தா கைது செய்யப்படவுள்ளதாக பரவிய வதந்தியால் கட்டுநாயக்கவில் பரபரப்பு!
[Thursday 2017-10-19 18:00]

அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ இன்று காலை நாடு திரும்பினார். அவர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்படுவார் என அரசியல் வட்டரங்கள் பரவலாக தகவல்கள் பரவியதால், விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஊடகவியலாளர்கள் பலரும் விமான நிலையத்தை நோக்கி படையெடுத்தனர்.


குடாநாட்டில் தீபாவளி மோதல்களில் 29 பேர் காயம்!
[Thursday 2017-10-19 18:00]

யாழ்ப்­பாணக் குடாநாட்டில், தீபா­வளி தின­மான நேற்று ஒரே நாளில் மட்­டும் அடிதடி, வாள்­வெட்­டுக்­க­ளில் காய­ம­டைந்த 29 பேர் வைத்­தி­ய­சா­லை­க­ளில் சேர்க்­கப்­பட்­ட­னர். யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் 23 பேரும், பரு­த்தித்­துறை மந்­திகை ஆதார வைத்­தி­ய­சா­லை­யில் 6 பேரும் காயங்களுடன் நேற்­றுச் சேர்க்­கப்­பட்­ட­னர்.


சுட்டுக் கொல்லப்பட்ட அகதியின் குடும்பத்தினர் இறுதிக்கிரியைக்காக சுவிசுக்கு செல்ல அனுமதி!
[Thursday 2017-10-19 18:00]

சுவிட்ஸர்லாந்தின் டிசினோ மாகாணத்தில் அகதிகள் இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த முல்லைத்தீவைச் சேர்ந்த சுப்பிரமணியம் கரன் என்பவர் அண்மையில் சுவிஸ் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமானார். மரணமானவரின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்வதற்கு அவரின் குடும்பத்தினருக்கு சுவிஸ் அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.


வித்தியா கொலை - மேன்முறையீட்டு மனு விசாரணை முடிய 5 ஆண்டுகளாகும்!
[Thursday 2017-10-19 18:00]

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் சார்பாக, உயர் நீதிமன்றில் முன்வைக்கப்படும் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் நிறைவு பெற குறைந்தது 5 ஆண்டுகள் வரை செல்லலாம் என குற்றவாளிகள் தரப்பு சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன தெரிவித்தார்.


தாய், மகன் படுகொலை - மேலும் இருவர் கைது! Top News
[Thursday 2017-10-19 18:00]

மட்டக்களப்பு, சவுக்கடியில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற இரட்டைப் படுகொலைகள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனரென, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். கொலை இடம்பெற்ற பகுதியில் நடைபெற்ற தீவிர விசாரணைகளின் பின் மோப்ப நாய்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, இருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து, சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்படுள்ளனர். அதையடுத்து மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர்.


பட்டாசு சிதறல் வாள்வெட்டில் முடிந்தது! - மூவர் படுகாயம்!
[Thursday 2017-10-19 18:00]

தீபா­வளி தின­மான நேற்று பட்டாசு ­கொளுத்­தி­ய­தில் ஏற்­பட்ட வாய்த் தர்க்­கம் வாள்­வெட்­டில் முடிந்­தது. பரு­த்தித்­துறை சுப்­பர்­ம­டம் பகு­தி­யில் நேற்­று­ மாலை 5.30 மணிக்கு இடம்­பெற்ற இந்­தச் சம்­ப­வத்­தில் காய­ம­டைந்­த­ மூவர் மந்­திகை வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர். சுப்­பர்­ம­டப் பகு­தி­யில் இளை­ஞர்­கள் சிலர் பட்டாசு ­கொ­ழுத்தி விளை­யா­டி­னர். அங்­கி­ருந்த வீடு ஒன்­றி­னுள்­ளும் வெடி­கள் வீழ்ந்­துள்­ளன.


ஆவரங்காலில் இளைஞனுக்கு கழுத்தில் கத்திக் குத்து!
[Thursday 2017-10-19 18:00]

ஆவரங்கால் சர்வோதயா வீதியில் ன்று காலை பத்து மணியளவில் இளைஞன் ஒருவர் மீது மர்ம நபர்கள் இருவர் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். ஆவரங்கால் சர்வோதயா வீதியில், உள் வீதிக்கு வந்த இருவர் தாங்கள் கொண்டு வந்த கத்தியால் குறித்த நபர் மீது சரமாரியாகக் குத்தியுள்ளனர். இதில், ஆழமான குத்துக் காயமொன்று கழுத்துப் பகுதியில் ஏற்பட்டுள்ளதுடன், குத்திய கத்தி, கழுத்துப் பகுதியில் அரைவாசியுடன் முறிவடைந்துள்ளது.


ஹிருணிகாவுக்கு ஐதேகவின் அமைப்பாளர் பதவி!
[Thursday 2017-10-19 18:00]

பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்மலானை தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அலரி மாளிகையில் வைத்து இவருக்கான நியமனக் கடிதத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று வழங்கினார்.


வடக்கிலும் தெற்கிலும் ஒரே சட்டம் தான்! - என்கிறார் பாதுகாப்புச் செயலாளர்
[Thursday 2017-10-19 18:00]

நாட்டில் இரண்டு சட்டங்கள் நடைமுறையில் இருப்பதாக பரவும் செய்தியில் உண்மையில்லை என்று பாதுகாப்பு செயலாளர் கபில வைத்யரத்ன கூறினார். நேற்று மாலை தலதா மாளிகைக்குச் சென்று வணக்க வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் கூறினார்.


மீனவர்கள் இருவரைக் காணவில்லை!
[Thursday 2017-10-19 18:00]

வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் கடற்பரப்பிலிருந்து தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். காணாமல் போனவர்கள், ஒரே படகில் சென்ற தந்தையும் மகனும் எனத் தெரிவிக்கப்பட்டுளளது.


புதிய அரசியலமைப்புக்கு எதிராக மல்வத்த, அஸ்கிரிய பீடங்கள் போர்க்கொடி!
[Thursday 2017-10-19 08:00]

இலங்கைக்கு, புதிய அரசமைப்போ அல்லது தற்போதுள்ள அரசமைப்பில் திருத்தங்களோ தேவையில்லை என்றும், புதிய அரசியலமைப்பை வரையும் பணிகளை நிறுத்த வேண்டும் என்றும் மல்வத்த, அஸ்கிரிய பீடங்களின் இணைந்த சபை, நேற்று தீர்மானித்துள்ளது. புதிய அரசமைப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அரசமைப்புச் சபையின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால வரைவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள பின்னணியிலேயே, இந்த முடிவை, மகாநாயக்க தேரர்கள் எடுத்துள்ளனர்.


சிவாஜிலிங்கம் ஒரு பொய்யன்! - என்கிறார் கஜேந்திரன்
[Thursday 2017-10-19 08:00]

சிவாஜிலிங்கம் ஒரு பொய்யன். ஒரு பக்கம் அவர் அரசியல் கைதிகளுக்கு சார்பாக கறுப்பு கொடி போராட்டம் நடத்துவதாக காட்டிவிட்டு மறுபக்கத்தால் அரசியல் கைதிகளின் உறவினர்களை அழைத்து கொண்டு போய் அமைச்சர் வே.இராதாகிருஷ்ணனை சந்தித்துள்ளார். நாங்கள் கேட்கிறோம் எதற்காக இந்த பித்தலாட்டம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன்


தென்னிலங்கை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய வெடிப்புச் சத்தம்!
[Thursday 2017-10-19 08:00]

மாத்தறை உள்ளிட்ட நாட்டின் தென்பகுதியில் நேற்றிரவு பாரிய வெளிச்சத்துடனான வெடிப்புச் சத்தமொன்று கேட்டதால் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் காணப்பட்டது. விண் கல் ஒன்று விழுந்ததால் இந்த வெடிப்புச் சத்தம் கேட்டிருக்கலாம் என்று சந்தேகங்கள் எழுந்துள்ளன. நேற்றிரவு 8.-30 மணியளவில் பிரகாசமான ஒளியையும், நிலநடுக்கம் போன்ற வெடிப்புச் சத்தத்தையும் தென்பகுதியில் பரவலாக மக்கள் அவதானித்துள்ளனர்.


உள்ளூராட்சித் தேர்தல் பலப்பரீட்சையாக இருக்கும்! - வியாழேந்திரன்
[Thursday 2017-10-19 08:00]

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து யாரும் வெளியேறிச்சென்று தனித்துவமாக செயற்பட முனைவார்களானால் அது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு கண்ணகியம்மன் ஆலய வீதியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.


மைத்திரியைத் தோற்கடிப்போம்! - ஜேவிபி சூளுரை
[Thursday 2017-10-19 08:00]

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான தார்மீக உரிமை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் கிடையாது என்றும், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு மாறாக, அடுத்த தேர்தலில் அவர் போட்டியிட்டால், மஹிந்த ராஜபக்‌ஷவை வீழ்த்தியமை போன்று, ஜனாதிபதி சிறிசேனவையும் வீழ்த்துவோம் எனவும் ஜே.வி.பி எச்சரித்துள்ளது.


நான்கு உதிரிக்கட்சிகள் பசிலுடன் இணைந்தன!
[Thursday 2017-10-19 08:00]

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியுடன் மேலும் 4 கட்சிகள் இணைந்துள்ளன. முன்னாள் பிரதி அமைச்சரான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையின் கீழ் இயங்கும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியும் இதில் அடங்கும். ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின், மக்கள் தொழிலாளர் கட்சி, ஸ்ரீ லங்கா முற்போக்கு முன்னணி மற்றும் ஸ்ரீ லங்கா லிபரல் கட்சி ஆகிய கட்சித் தலைவர்கள், நேற்று முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைச் சந்தித்து, பொதுஜன முன்னணியில் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளனர்.


மகிந்தவை மீண்டும் பதவிக்குக் கொண்டு வர வடக்கில் சிலர் முயற்சி! - என்கிறார் டிலான்
[Thursday 2017-10-19 08:00]

மகிந்த ராஜ­பக்­சவை மீண்­டும் பத­விக்குக் கொண்­டு­வர முயற்­சிக்­கின்­றீர்­களா என்று சுரேஷ் பிரே­ம­சந்­தி­ரன், கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் மற்­றும் சிவா­ஜி­லிங்­கத்­தி­டம் இரா­ஜாங்க அமைச்­சர் டிலான் பெரேரா கேள்வி எழுப்பியுள்ளார்.


வேட்பாளர்களுக்கு வருகிறது கடிவாளம்!
[Thursday 2017-10-19 08:00]

தேர்தல்களின் போது, கட்சிகளும் வேட்பாளர்களும் மேற்கொள்ளும் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அடுத்த தேர்தல்களில், தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


அரசியலில் குதிக்கும் ஜே.ஆரின் பேரன்!
[Thursday 2017-10-19 08:00]

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் பேரனான பிரதீப் ஜெயவர்தன அரசியலில் குதிக்கவுள்ளதாகத் தெரியவருகிறது. இவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவர் நேரடி அரசியலில் களமிறங்கவுள்ளதாகத் தெரியவருகிறது. தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது.


தாய், மகன் கொலை- மோப்பநாயின் உதவியுடன் மூவர் கைது!
[Thursday 2017-10-19 08:00]

மட்டக்களப்பு - புன்னக்குடா பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று அதிகாலை தாயும், மகனும் கழுத்து வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மோப்ப நாய்கள் இருவரை அடையாளம் காட்டிய நிலையில், குறித்த இருவரிடமும் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேகத்தின் பெயரில் மற்றொருவர் கைது செய்யபடுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.


அரசியல் கைதிகள் குறித்து நாளை முடிவெடுப்பதாக அரசாங்கம் அறிவிப்பு!
[Wednesday 2017-10-18 18:00]

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் வழக்குகளை மீண்டும் வவுனியாவிற்கு மாற்றம் செய்வது தொடர்பில் நாளை பேச்சு நடத்தி உரிய தீர்மானம் எடுப்போம். இது தொடர் பில் பேசித் தீர்க்க நாம் தயாராக உள்ளோம். அத்துடன் அரசியல் கைதிகளின் வழக்கு விசார ணைகளை துரிதப்படுத்த தயாராக உள்ளோம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா