Untitled Document
March 26, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
போர்க்குற்றங்கள் தொடர்பாக போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை! - விக்னேஸ்வரன்
[Sunday 2017-03-26 17:00]

இறுதிக்கட்டப் போரின் போது இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் குறித்து அதிகாரத்தில் உள்ளவர்களால் போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தால் முன்னெடுக்கப்படும் பொருளாதார ஊக்குவிப்பு வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய வட மாகாண முதலமைச்சர், பொறுப்புகூறல் மற்றும் நியாயத்திற்காகவே தமிழ் மக்கள் ஏங்கிக் கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.


முள்ளிக்குளம் மக்களின் போராட்டம் - இன்று நான்காவது நாள்!
[Sunday 2017-03-26 17:00]

தமது பூர்வீக நிலங்களில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை வெளியேற்றக் கோரியும், தங்களை மீள் குடியேற்றம் செய்ய வலியுறுத்தியும், முள்ளிக்குளம் கிராம மக்கள் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.


காணாமற் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் தொடர்கிறது! Top News
[Sunday 2017-03-26 17:00]

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் இன்று 35ஆவது நாளாக தொடர்கின்றது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கடந்த மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் இன்று வரையில் தொடர்ந்து வருகிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலை மற்றும் வெளிப்படுத்தல் என்பவற்றை வலியுறுத்தி தமது போராட்டத்தினை தொடர்ந்து வருகின்றனர்.


கலப்பு நீதிமன்றத்துக்கு ஒருபோதும் இடமில்லை! - டிலான் பெரேரா
[Sunday 2017-03-26 17:00]

ஜெனிவாவில், எவ்வாறான வாக்குறுதிகளை கொடுத்தாலும் இலங்கைக்குள் கலப்பு நீதிமன்றம் ஒன்றை அமைக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். சர்வதேச கட்டளைகளுக்கு அடிபணிய ஒருபோதும் தயார் இல்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகப்பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.


ரயில் கடவையில் படுத்திருந்தவர் ரயில் மோதி மரணம்!
[Sunday 2017-03-26 17:00]

யாழ்ப்பாணத்தில், நாவற்குழி - புங்கன்குளம் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள ரயில் கடவையில் படுத்திருந்த இளைஞன், ரயில் மோதி உயிரிழந்தார். இன்று காலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், நீர்ப்பாசன திணைக்களத்தில் பணியாற்றும் அரியாலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த தவநாயகம் திரேந்திரா (வயது 28) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தார்.


முதலைக் கண்ணீர் வடிக்கிறார் மஹிந்த! - பொன்சேகா
[Sunday 2017-03-26 17:00]

போர் முடிந்து, இரு வாரங்களுக்குள் ஐ.நா.வின் அப்போதைய பொதுச் செயலாளர் பான் கீ மூனை, இலங்கைக்கு அழைத்து போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படுமென உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டு, மஹிந்த ராஜபக்ஷ தற்போது முதலைக் கண்ணீர் வடிக்கிறார் என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.


உண்ணாவிரதம் இருந்த விமல் வீரவன்ச சிறைச்சாலை மருத்துவமனையில்!
[Sunday 2017-03-26 17:00]

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்தே, ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்கள தரப்புகள் தெரிவிக்கின்றன.


நெடுந்தீவு கடற்பரப்பில் 12 இந்திய மீனவர்கள் கைது! Top News
[Sunday 2017-03-26 17:00]

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 மீன்பிடி படகுகள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்கள் கடற்படையினரால் யாழ்ப்பாணத்திலுள்ள நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


கிளிநொச்சியில் காணிகளை விடுவிக்கக் கோரி நாளை கண்டனப் பேரணி!
[Sunday 2017-03-26 17:00]

கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமுள்ள அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்க கோரி நாளை கண்டனப்பேரணி, நடைபெறவுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் வட்டக்கச்சி விவசாய பண்ணைக்காணி, கிளிநொச்சி மகாவித்தியாலக் காணி, மாவட்டச் செயலக காணி, தேசிய இளைஞர்சேவை நிலையக் காணி, நீர்ப்பாசனத் திணைக்களக்காணி, உள்ளிட்ட காணிகள் கடந்த எட்டு வருடங்களாக படையினர் வசமுள்ளன.


லசந்த கொலையை திசை திருப்பிய சட்ட மருத்துவ அதிகாரி விரைவில் கைது!
[Sunday 2017-03-26 17:00]

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலையை திசை திருப்பிய சட்ட வைத்திய அதிகாரி சுனில் குமார கைதுசெய்யப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. லசந்த விக்ரமதுங்க தலையில் கடுமையாகத் தாக்கப்பட்ட காயத்தினால் மரணமானார் என்று அண்மையில்குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் அறிவித்திருந்தனர்.


மோட்டார் சைக்கிள் விபத்து - இளைஞனும், எருமையும் மரணம்!
[Sunday 2017-03-26 17:00]

மட்டக்களப்பில், மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகச் சென்ற இளைஞர்கள், வீதியில் குறுக்கே சென்ற எருமை மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றவர் படுகாயமடைந்தார். இந்த விபத்தில், மோட்டார் சைக்கிள் மோதிய எருமையும், உயிரிழந்தது. பாலையடிவட்டை பிரதான வீதியில், நேற்று மாலை இடம்பெற்ற இவ்விபத்தில், அதேபகுதியைச் சேர்ந்த சபாரெத்தினம் பிரபு (வயது 30) என்பவர் உயிரிழந்தார். அதேவேளை, மற்றுமொருவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


பிரபாகரனைத் தோற்கடித்ததால் மஹிந்தவை தமிழ் மக்கள் பழிவாங்கினர்! - கோத்தாபய
[Sunday 2017-03-26 07:00]

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைத் தோற்கடித்தமைக்காக, மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தை தமிழ் மக்கள் பழிவாங்கி விட்டனர் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். “போர் வெற்றியின் முக்கியத்துவத்தை மக்கள் புரிந்து கொள்ளத் தவறியுள்ளனர். சில சில நபர்கள் கூறிய பொய்களை கேட்டு ஏமாந்த மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடித்தனர்.


வட்டுவாகல் கடற்படைத் தளப் பகுதியில் புதிய அறிவிப்பு பலகைகள்! - ஆபத்தான பகுதியாம் Top News
[Sunday 2017-03-26 07:00]

முல்லைத்தீவு - வட்டுவாகல் கடற்படைத் தளப்பகுதியில் நேற்று புதிய அறிவிப்புப் பலகைகள் போடப்பட்டுள்ளன. வட்டுவாகல் தொடக்கம் முள்ளிவாய்க்கல் வரை உள்ள மக்களின் 657 ஏக்கர் காணிகளை கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக பொதுமக்கள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வந்துள்ளனர். இந்த நிலையில் குறித்த பகுதியை பாதுகாப்பற்ற பிரதேசமாக அறிவித்து கடற்படையினர் , அறிவித்தல் பலகைகளை தொங்க விட்டுள்ளனர்.


மூன்றரை மாதங்களில் 217 பில்லியன் ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன!
[Sunday 2017-03-26 07:00]

இந்த ஆண்டு ஜனவரி மாதம் 1ம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 17ம் திகதி வரையிலான மூன்றரை மாத காலப் பகுதியில் 217 பில்லியன் ரூபா நாணயத்தாள்களை அரசாங்கம் அச்சிட்டுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செலவுகள் வெகுவாக உயர்வடைந்துள்ளதாகவும், வருமானத்தை விடவும் பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


வேலையற்ற பட்டதாரிகளுடன் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்திப்பு!
[Sunday 2017-03-26 07:00]

வேலையற்ற பட்டதாரிகள், சராசரியாக 35 வயதை எட்டிய நிலையில் போராடுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். கடந்த 24 ஆம் திகதி மாலை 5.00 மணியளவில் வேலையற்ற பட்டதாரிகளுடன் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.


ராஜீவைக் கொல்ல வேண்டும் என்று கூறினார் பிரபாகரன்! - கருணா கூறுகிறார்
[Sunday 2017-03-26 07:00]

வடக்கில் இந்தியப் படையினர் பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய காரணத்தினால், இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ய வேண்டுமென விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தம்மிடம் கூறினார் என முன்னாள் பிரதி அமைச்சர் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


படையினரின் குற்றங்களுக்கு சாட்சியங்கள் இல்லை! - என்கிறார் முன்னாள் இராணுவத் தளபதி
[Sunday 2017-03-26 07:00]

இராணுவத்தினர் மீதான போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் இவற்றுக்கு எந்த ஆதோரமும் இல்லை என்றும் முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார். “ போர்க்குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுக்கள் போலியாக தயாரிக்கப்பட்டவை. உலகின் மிகவும் மோசமான பயங்கரவாத அமைப்பாக அடையாளப்படுத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளை நாம் அழித்துள்ளோம்.


டொலருக்கு எதிரான ரூபாவின் மதிப்பு சரிவு!
[Sunday 2017-03-26 07:00]

கடந்த சில மாதங்களில் இலங்கை ரூபாவின் பெறுமதி 1.2 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதனால் தற்போது டொலர் ஒன்று, 151.76 ரூபாய் பெறுமதியை எட்டியுள்ளதாக மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


நவீன வாக்களிப்பு முறைகள் குறித்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை!
[Sunday 2017-03-26 07:00]

தேர்தல்களில் நவீன வாக்களிப்பு முறைகள் அறிமுகம் செய்யப்பட வேண்டியது அவசியமானது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் கட்சியின் செயலாளர்களுடன் எதிர்வரும் 29ம் திகதி தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சந்திப்பு நடத்த உள்ளார்.


ஜெனிவாவில் படையினரைக் காட்டிக் கொடுத்து விட்டார் மங்கள! - தயான் ஜயதிலக
[Sunday 2017-03-26 07:00]

ஜெனிவாவில் மங்கள சமரவீர படையினரைக் காட்டிக் கொடுத்துள்ளதால் அவரை வெளிவிவகார அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியின் செயற்பாட்டாளரான தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.


காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் தீர்வின்றித் தொடர்கிறது! Top News
[Saturday 2017-03-25 18:00]

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் நடத்தி வரும் போராட்டம் இன்று பத்தொன்பதாவது நாளாக இடம்பெற்று வருகின்றது. யுத்தம் நிறைவுக்கு வந்ததை தொடர்ந்து இராணுவத்திடம் சரணடைந்த தமது உறவுகள் தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த தொடர்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இரவு பகலாக இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.


முள்ளிக்குளத்தில் போராட்டம் நடத்தும் மக்களைப் படம் எடுத்து அச்சுறுத்தும் கடற்படை! Top News
[Saturday 2017-03-25 18:00]

தமது பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்தள்ள கடற்படையினரை வெளியேற்றக் கோரி, மன்னார் -முள்ளிக்குளம் கிராம மக்கள் முன்னெடுத்து வருகின்ற கவனயீர்ப்பு போராட்டம், இன்று 3ஆவது நாளாக தொடர்கின்றது. இந்த நிலையில் கடற்படையினர், முகாமை விட்டு வெளியில் வந்து மக்களைத் தொடர்ச்சியாகப் புகைப்படமெடுத்து, அச்சுறுத்துவதாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற, மக்கள் தெரிவித்தனர்.


மக்கள் ஆதரவை இழந்துவரும் ஒன்ராறியோ முதல்வர்! கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
[Saturday 2017-03-25 18:00]

ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின் தமது மாகாண மக்களிடையேயான ஆதரவை இழந்து வருவதாக கூறப்படுகிறது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. கத்தலின் வின்னுக்கு தற்பொது மக்கள் மத்தியில் 12 சதவீதமான ஆதரவே காணப்படுகின்றமை அண்மையில் “Angus Reid Institute” எனப்படும் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புகளில் இருந்து தெரியவந்துள்ளது.


இலங்கை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடுகள் அதிகம் உள்ளன! - பிரித்தானியா
[Saturday 2017-03-25 18:00]

போரினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில், இலங்கை இன்னும் பல்வேறு கருமங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது என பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அமைச்சர் பரோனஸ் அனெலி தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


ரஜினியின் இலங்கைப் பயணம் ரத்து!
[Saturday 2017-03-25 18:00]

நான் இலங்கையில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதைத் தவிர்க்கிறேன். இனிவரும் காலங்களில் இலங்கை செல்வதை அரசியலாக்கி அங்கு என்னை போகவிடாமல் செய்துவிடாதீர்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்-


ஆறு தடவைகள் இலங்கை வரவுள்ள ஐ.நா அதிகாரிகள்!
[Saturday 2017-03-25 18:00]

இலங்கை தொடர்பாக ஜெனிவா மனித உரிமைப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி, ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் ஆறு தடவைகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமை செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுகுறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவித்து மீளக்குடியமர்த்துங்கள்! - வலி.வடக்கு மக்கள் கோரிக்கை
[Saturday 2017-03-25 18:00]

வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் இருக்கின்ற காணிகளை விடுவித்து தங்களை மீளக்குடியமர்த்துமாறு, யாழ்ப்பாணம் வந்திருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிடம் வலிகாமம் வடக்கிலிருந்த இடம்பெயர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஜெனிவா தீர்மானத்துக்கு 47 நாடுகள் அனுசரணை!
[Saturday 2017-03-25 18:00]

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்துக்கு இதுவரையில் 47 நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளன. அமெரிக்கா, பிரித்தானியா, மசிடோனியா, மொன்ரனிக்ரோ ஆகிய நாடுகள் இணைந்து முன்வைத்த, இலங்கை தொடர்பான 34/ எல்-1 தீர்மானம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 2017 மார்ச் 23 ஆம் நாள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Elankeeran-debt-solution-25-06-2016
Mahesan-Remax-169515-Seithy
<b>05-03-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற Ninaivakal-2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>26-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற ARAJEN-Beauty-Forever-2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>25-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற NETHRA - Movie Appreciation  நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா