Untitled Document
September 21, 2024 [GMT]


முள்ளிக்குளம் போராட்டத்தை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்வேன்! - ஆளுநர் உறுதி Top News
[Saturday 2017-04-22 17:00]

முள்ளிக்குளம் மக்களின் போராட்டம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று சிறந்த தீர்வுடன் விரைவில் உங்களை மீண்டும் சந்திப்பேன் என வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உறுதியளித்துள்ளார். மன்னார் ஆயர் இல்லத்தின் அழைப்பை ஏற்று நேற்று மன்னாருக்கு பயணம் மேற்கொண்ட வட மாகாண ஆளுநர், அங்கு மண்மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முள்ளிக்குளம் மக்களை சந்தித்து கலந்துரையாடிய பின்னரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


இன்று ஜனாதிபதி தேர்தல்!
[Saturday 2024-09-21 05:00]

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் இன்று நடைபெறவுள்ளது.காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.


வன்முறைகள் நடந்தால் முடிவுகளை வெளியிட முடியாத நிலை ஏற்படும்!
[Saturday 2024-09-21 05:00]

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பின் போது வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றால் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியாத நிலைமை ஏற்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


தியாக தீபம் திலீபன் வரலாற்று ஆவணக் காட்சியகம் திறந்து வைப்பு! Top News
[Saturday 2024-09-21 05:00]

தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் "பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!!" எனும் தொனிப்பொருளுடன் கூடிய ஆவணக் காட்சியகம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.


ஜெனிவா தீர்மான இறுதி வரைவு ஒக்டோபர் முதல் வாரத்தில்!
[Saturday 2024-09-21 05:00]

இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தைக் காலநீடிப்பு செய்யக்கோரி பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டுள்ள வரைபை வாக்கெடுப்புடனோ அல்லது வாக்கெடுப்பின்றியோ நிறைவேற்றுவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து வியாழக்கிழமை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஆராயப்பட்டுள்ளது.


வெட்டுப்புள்ளி வெளியானது!
[Saturday 2024-09-21 05:00]

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் நேற்று மாலை வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


கசியவிட்ட 3 பேர் பணி இடைநீக்கம்!
[Saturday 2024-09-21 05:00]

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் விநியோகித்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே திஸ்ஸ கல்லூரியின் பரீட்சை நிலையத்தில் கடமையாற்றிய தலைமை ஆசிரியர், கண்காணிப்பாளர் மற்றும் ஆசிரியர் ஒருவரை பணி இடைநீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


ரவி, ஷானியை கைது செய்யும் திட்டம் இல்லை!
[Saturday 2024-09-21 05:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் விசாரணைகளுக்கு அமைவாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன மற்றும் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோரை கைது செய்வதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.


மக்கள் ஒத்துழைத்தால் அமைதி ஏற்படும்!
[Saturday 2024-09-21 05:00]

அனைத்து பிரஜைகளும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கு ஆதரவு வழங்கினால், அடுத்த சில நாட்களிலும் தொடர்ந்து நாட்டில் அமைதியான சூழல் ஏற்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர், நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.


தொடர் கொலைகளுக்குப் பின்னால் தொடர்பு!
[Saturday 2024-09-21 05:00]

தெஹிவளை நெதிமால பகுதியில் நேற்று காலை நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். உள்ளூர் போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் நெருங்கிய உறவினரான 45 வயதுடைய நபரே இவ்வாறு கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


போதையில் தேர்தல் பணியில் ஈடுபட்ட சாரதி கைது!
[Saturday 2024-09-21 05:00]

தெரணியகலை பிரதேசத்தில் உள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு பணியாளர்களை அழைத்துச்சென்ற வேன் சாரதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


வாக்குப்பெட்டிகள் அனுப்பப்பட்டன - தேர்தலுக்கு ஏற்பாடுகள் தயார்! Top News
[Friday 2024-09-20 16:00]

ஜனாதிபதி தேர்தல் நாளை நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ள நிலையில் வாக்குப் பெட்டிகள் இன்றையதினம் (20) வாக்களிப்பு மையங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளன.


நீளமான வாக்குச் சீட்டு - அதிகாரிகளுக்கு தாங்க முடியாத சுமை!
[Friday 2024-09-20 16:00]

மிக நீளமான வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதால் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் பெரிதும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். 39 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெறுவதால் வாக்குச் சீட்டு இரண்டே கால அடி வரை நீளமுள்ளதாக காணப்படுகிறது. அவற்றை இன்று பொறுப்பேற்ற தேர்தல் அதிகாரிகள் தூக்கிச் செல்வதற்கு பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.


பவித்ரா, றோகித, சந்திரசேனவை கட்சியில் இருந்து நீக்கியது மொட்டு!
[Friday 2024-09-20 16:00]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டமைக்காக பாராளுமன்ற உறுப்பினர்களான பவித்ரா வன்னியாராச்சி, ரோஹித அபேகுணவர்தன மற்றும் எஸ்.எம். சந்திரசேன ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க அந்த கட்சி தீர்மானித்துள்ளது.


நாட்டை விட்டு வெளியேறினால் பசில் - விரைவில் திரும்புவாராம்!
[Friday 2024-09-20 16:00]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டுபாய் சென்றதாக விமான நிலைய கடமை முகாமையாளர் தெரிவித்தார். அதிகாலை 03.05 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் துபாய்க்குப் புறப்பட்டார்.


வவுணதீவில் கைக்குண்டுகள் மீட்பு!
[Friday 2024-09-20 16:00]

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விளாவட்டுவான் பகுதியில் இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.


இன்று திறக்கப்படுகிறது திலீபன் ஆவணக் காட்சியகம்!
[Friday 2024-09-20 16:00]

தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் "பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!!" எனும் தொனிப்பொருளுடன் கூடிய ஆவணக் காட்சியகம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.


புலமைப்பரிசில் விடைத்தாள் திருத்தும் பணி நிறுத்தம்!
[Friday 2024-09-20 16:00]

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் விசாரணைகள் முடிந்த பின்னர் அவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.


பால் புரையேறி 12 நாள் குழந்தை மரணம்!
[Friday 2024-09-20 16:00]

யாழ்.போதனா வைத்தியசாலையில் 12 நாட்களேயான ஆண் சிசு ஒன்று உயிரிழந்துள்ளது. கோப்பாய் வடக்கைச் சேர்ந்த தம்பதிகளுக்கு கடந்த எட்டாம் மாதம் 31ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.


சங்கிலி அறுத்த தம்பதி பிடிபட்டது!
[Friday 2024-09-20 16:00]

யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சங்கானை வைத்தியசாலை வீதியில், துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த பெண்ணொருவரின் சங்கிலியை, மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினர் அறுத்துக்கொண்டு தப்பி ஓட முயன்ற வேளை ஊரவர்கள் மடக்கி பிடித்து மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.


9 அதிகாரிகள் தேர்தல் பணியில் இருந்து நீக்கம்!
[Friday 2024-09-20 15:00]

தேர்தல் பணிகளில் இருந்து 09 அரச அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்ட 09 அரச அதிகாரிகளே இவ்வாறு நீக்கப்பட்டதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி எம்.பி.சுமணசேகர தெரிவித்தார்.


அசம்பாவிதம் நடந்தால் மீள் வாக்குப்பதிவு!
[Friday 2024-09-20 06:00]

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பின் போது ஏதேனும் வாக்களிப்பு நிலையத்தில் ஏதேனும் அசம்பாவித நிலைமை ஏற்படுமாக இருந்தால் அந்த வாக்களிப்பு நிலையத்தின் வாக்குகளை சூனியமாக்க நேரிடும் என்பதுடன், அங்கே மீண்டும் வாக்கெடுப்பை நடத்தும் வரையில் நாடாளவிய ரீதியிலான இறுதித் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியாத நிலைமை ஏற்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி?
[Friday 2024-09-20 06:00]

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி தேர்தல் தினத்தன்று பிற்பகல் 04.15 மணிக்கு ஆரம்பமாகும். எண்ணும் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து உரிய முடிவுகளை ஊடகங்களுக்கு வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.உத்தியோகபூர்வ முடிவுகள் கிடைக்கப்பெறும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகள் வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


தேர்தல் நாளன்று ஆறு தடைகள்!
[Friday 2024-09-20 06:00]

ஆறு முக்கிய விடயங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதனடிப்படையில், வாக்களிக்குமாறு இரந்து கேட்டல, எவரேனும் தேருநரின் வாக்கைப் பரிந்து கேட்டல், குறிப்பிட்ட எவரேனும் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாமென்று எவரேனும் நேருநரை தூண்டி வசப்படுத்த முயலுதல், தேர்தலில் வாக்களிக்க வேண்டாமென்று நேருநரை தூண்டி வசப்படுத்த முயலுதல் தடைசெய்யப்பட்டுள்ளது.


புதிய முதலீடுகள்,வேலைவாய்ப்புப் பெருக்கங்களுக்கு வழியேற்படுத்துகிறது ஒன்ராறியோ!
[Friday 2024-09-20 06:00]

புதிய வணிகங்களை ஈர்ப்பதற்கும், நல்ல ஊதியம் தரும் வேலைகளை உருவாக்குவதற்குமான களத்தினைத் தயார்ப்படுத்தும் பொருளாதார உயர்வுத் திட்டங்களுக்கென 75 மில்லியன் டொலர்களை ஒன்ராறியோ முதலீடு செய்துள்ளது. பெரும் முதலீட்டாளர்களை ஒன்ராறியோவை நோக்கி வரவைக்கும் இம்முன்முயற்சியானது தொழில் வளர்ச்சிக்கான களத்தைத் அமைத்துக்கொடுக்கும் திட்டமாக அமையும்.


யாழ்ப்பாணத்தில் தேர்தலுக்கு தயார்!
[Friday 2024-09-20 06:00]

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் பதில் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.


சமூக ஊடகங்களில் வெளியிடத் தடை!
[Friday 2024-09-20 06:00]

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் அன்று வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பங்களையும் அடையாளமிடப்பட்ட வாக்குச் சீட்டுக்களையும் நிழற்படமெடுத்தல் மற்றும் வீடியோ எடுத்தல் அல்லது சமூக ஊடக வலைத்தளங்களில் வெளியிடுதல் தேர்தல் சட்டத்தை மீறும் செயல்கள் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.


சிஐடி விசாரணைக்குப் பின்னரே மீள் பரீட்சை குறித்து முடிவு!
[Friday 2024-09-20 06:00]

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் பரீட்சை திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழர் ஆதரவு மட்டுமல்ல சர்வதேசத்தின் ஆதரவும் கிடைத்துள்ளது! - நிரோஸ்
[Friday 2024-09-20 06:00]

போரின் பின்பாக நாட்டின் தேசிய இனங்களில் ஒன்றான தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை முன்வைக்காது ஏமாற்றிய சிங்களப் பேரினவாதத் தலைவர்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு தமிழ் மக்கள் அளித்துவரும் ஆதரவைப் பார்த்து அச்சமடைந்துள்ளார்கள் என்பதுடன் சர்வதேசம் பொதுவேட்பாளரின் நியாயப்பட்டை அங்கீகரிக்கின்றது. இந்நிலைமை எமது தேசியத்துக்குக் கிடைத்த வெற்றி. இவ் வெற்றியை எதிர்வரும் தேர்தல் முடிவுகளின் வாயிலாக எமது மக்கள் வரலாற்று வெற்றியாக்குவர் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை என ரெலோவின் தலைமைக்குழு உறுப்பினரும் முனனாள் தவிசாளருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.

Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா