Untitled Document
January 24, 2018 [GMT]
  • Welcome
  • Welcome


யாழ்ப்பாணத்தில் புலிகளின் பாடலை ஒலிக்கவிட்டு வாக்குப் பிச்சை கேட்கும் சுதந்திரக்கட்சி!
[Friday 2018-01-12 19:00]

யாழ்ப்பாணத்தில் நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில், “நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா” என்ற விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல் ஒலிக்க விடப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு இன்று காலை யாழ். நகரிலுள்ள “பிள்ளையார் இன்” விருந்தினர் தங்ககத்தில் நடைபெற்றது.


புங்குடுதீவில் கடற்படை வாகனம் மோதி மாணவி பலி! - இன்று காலை சம்பவம்
[Wednesday 2018-01-24 08:00]

புங்குடுதீவில் கடற்படை வாகனம் மோதி பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்தார். இன்று காலை சைக்கிளில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த மாணவியே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்திற்கு ஊர்காவற்துறை பொலிஸார் சென்றுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


மகிந்த, கோத்தா மீது பாய்கிறது குற்றவியல் வழக்கு!
[Wednesday 2018-01-24 07:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் வழக்கு தொடரப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகங்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


அதிபரை முழந்தாளிட வைத்த சம்பவம் - நாடாளுமன்றத்தில் 2 மணிநேரம் விசாரணை!
[Wednesday 2018-01-24 07:00]

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலத்தின் அதிபர் ஆர்.பவானியை அச்சுறுத்தி முழங்காலிட வைத்த சம்பவம் தொடர்பில், கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி பற்றி துறைசார் மேற்பார்வைக் குழு முன்னிலையில், நேற்று விசாரணைகள் நடைபெற்றன. நாடாளுமன்றத்தில் நேற்று பிற்பகல் 1:30க்கு ஆரம்பமான அந்த விசாரணைகள், சுமார் இரண்டு மணி நேரம் இடம்பெற்றன.


ஊரெழு விபத்தில் இளைஞன் பலி!
[Wednesday 2018-01-24 07:00]

ஊரெழு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


வடக்கு மாகாணசபையை புறக்கணிக்கவில்லை! - அனந்திக்கு யாழ்.வர்த்தக தொழில்துறை மன்றம் பதில்
[Wednesday 2018-01-24 07:00]

அமைச்சர் அனந்தி சசிதரனுக்கு வர்த்தக துறையை முன்னேற்றும் நோக்கம் இல்லை என யாழ்.வர்த்தக தொழில்துறை மன்றத்தின் தலைவர் வி.கே.விக்னேஸ் குற்றம்சுமத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச வர்த்தக சந்தை தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


வடக்கிலும் குளிர் வாட்டும்!
[Wednesday 2018-01-24 07:00]

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட பிரதேசங்களில் காலை மற்றும் இரவு வேளையில் குளிரான நிலைமை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.கால நிலை தொடர்பில் இன்றைய தினம் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. “நாட்டின் வட பிரதேசங்களில் காலை மற்றும் இரவு வேளையில் குளிரான நிலைமை எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் சில பிரதேசங்களில் காலை வேளையில் பனிமூட்டம் எதிர்பார்க்கப்படுகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனக்கும் 4 கோடி ரூபா தரப்பட்டது! - சுரேஸ் பிரேமச்சந்திரன்
[Wednesday 2018-01-24 07:00]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் 2 கோடி ரூபா நிதி ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு மட்டும் வழங்கப்படாததன் பின்னணியில் த.தே.கூட்டமைப்பு மத்திய அரசின் வரவு செலவு திட்டத்திற்கு கையை தூக்கியதற்காக பேசப்பட்ட பேரம் அம்பலமாகியுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


காங்கேசன்துறை கடற்பரப்பில் மிதந்து வந்த 186 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்பு!
[Wednesday 2018-01-24 07:00]

காங்கேசன்துறை கடற்பரப்பில் நேற்று இரவு 8 மணியளவில் 186 கிலோ நிறையுடைய கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ் பிராந்திய கடற்படையின் உதவிப்பணிப்பாளர் ஆர். ஐயந்த டி சில்வா தெரிவித்துள்ளார். 19 இலட்சம் ரூபா பெறுமதியுடைய குறித்த கேரள கஞ்சா பொதிகள் காங்கேசன்துறை கடற்பரப்பில் மீதந்து வந்த நிலையில் மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.


சிறுவனைத் தாக்கிய சிறைக்காவலர்கள்!
[Wednesday 2018-01-24 07:00]

கிளிநொச்சி- கரடிப்போக்கு பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிற்குள் நேற்று மாலை சிறுவன் ஒருவனை சிவில் உடையில் இருந்த சிறைக்காவலர்கள் இருவரும் சீருடையில் இருந்த சிறைக்காவலர்கள் இருவரும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.


வவுனியா பெண் ரயில் மோதி மரணம்!
[Wednesday 2018-01-24 07:00]

வெள்ளவத்தையில் நேற்றுக்காலை இடம்பெற்ற ரயில் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். வவுனியா - தாண்டிகுளம் பகுதியை சேர்ந்த கமலவதனா(கமலி) என்ற 35 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார். வெள்ளவத்தை ரயில் நிலையத்தில் தனது ஆறு வயது மகனுடன் ரயிலிருந்து மற்றுமொரு ரயிலுக்கு மாறும் போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தாய் உயிரிழந்துள்ள நிலையில், மகன் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.


காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்! Top News
[Tuesday 2018-01-23 18:00]

காணாமல்போனவர்களின் உறவுகளினால் வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் ஆரம்பமாகி இன்றுடன் 334 ஆவது நாள் நிறைவடைகின்றது. வவுனியாவில் முதன்முறையாக உறவுகளினால் மேற்கொள்ளப்பட்ட சாகும் வரையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் கடந்த 2017 ஆம் ஆண்டு தை மாதம் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடமானதை முன்னிட்டு இன்றையதினம் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை காணாமல்போனோரது உறவுகள் மேற்கொண்டனர்.


நாயாறில் சிங்கள மீனவர்களை குடியமர்த்தும் முயற்சியால் பதற்றம்!
[Tuesday 2018-01-23 18:00]

முல்லைத்தீவு - நாயாறு பகுதியில் இன்று சிங்கள- தமிழ் மீனவர்களிடையே பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. அரசியல் நோக்கங்களுக்காக தெற்கில் இருந்து 300 மீனவர்கள் அழைத்து வரப்பட்டு அப் பகுதியில் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை அநீதியானது என, அப் பிரதேசத்திலுள்ள தமிழ் மீனவர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.


தமிழ் மக்கள் தமிழீழம் கோருவது நியாமான ஒன்றாகும்: முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க Top News
[Tuesday 2018-01-23 18:00]

இலங்கையில் நீண்ட காலமாக தமிழ் மக்கள் முகம் கொடுத்துள்ள மாற்றங்கள் காரணமாக இவ்வாறான கோரிக்கை வலுப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார. பெரும்பான்மை இன சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தி தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். எங்களுக்கு செய்யவில்லை என்றால் எங்களுக்கு தனி நாடு வழங்குங்கள் என தமிழ் மக்கள் தமிழீழம் கோருவது நியாயமான ஒன்றாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


மண்டியிட வைத்த முதலமைச்சர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிப்பு!
[Tuesday 2018-01-23 18:00]

பதுளை மகளிர் கல்லூரியின் அதிபரை மண்டியிட வைத்த சம்பவம் தொடர்பில் பதுளை பொலிஸ் நிலையத்தில் ஆஜரான ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


அதிரடிப்படை புலனாய்வு அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!
[Tuesday 2018-01-23 18:00]

அரியாலை - மணியந்தோட்டம் பகுதியில் இளைஞரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின், சந்தேகநபர்களான சிறப்பு அதிரடிப்படையின் புலனாய்வு அதிகாரிகள் இருவரின் விளக்கமறியலை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி வரை நீடித்து, யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதீஸ்தரன் இன்று உத்தரவிட்டார்.


வடக்கை புறக்கணிக்கும் மத்திய அரசுக்கு இந்தியா துணை! - அனந்தி சீற்றம்
[Tuesday 2018-01-23 18:00]

வடக்கு மாகாணசபையின் நிர்வாக எல்லைக்குள்ளாக நடைபெறும் பொது நிகழ்வுகள், அபிவிருத்தி நடவடிக்கைகள் என்பவற்றில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபையை முற்றிலுமாக புறக்கணித்து வரும், மத்திய அரசின் சதிக்கு இந்திய அரசும் துணைபோவது வேதனையளிப்பதாக, வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.


இழுத்தடிப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியாது! - ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதியிடம் சம்பந்தன் Top News
[Tuesday 2018-01-23 18:00]

இன்று இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் பிரிவுத் தலைவருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்குமிடையில் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பில் இரா.சம்பந்தன், ஐரோப்பிய தூதுவரைத் தெளிவுபடுத்தினார்.


அதிகாலையில் வீட்டுக்குள் நுழைந்த முதலை! - பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பு Top News
[Tuesday 2018-01-23 18:00]

வவுனியா - மன்னார் வீதியில், நெலுங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் இன்று அதிகாலை 4 மணியளவில் முதலை ஒன்று நுழைந்தது. சுமார் 6 நீளமான முதலையை வீட்டு உரிமையாளர், அயலவர்களின் உதவியுடன் பிடித்துள்ளார். பின்னர் இன்று காலை அந்த முதலை நெலுங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதனை வவுனியா வனஜீவராசிகள் அலுவலகத்திடம் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.


சர்வதேச நீதிபதிகள் இலங்கைக்கு சாதகமாக இருக்கமாட்டார்கள்! - உண்மையை உடைத்தார் மகிந்த
[Tuesday 2018-01-23 18:00]

உண்மைகளை கண்டறியும் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப்போவதில்லை. சர்வதேச நீதிபதிகள் பக்கச்சார்பாகவும், வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அமையவுமே செயற்படுவர். இது இலங்கைக்கு சாதகமாக அமையாது என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.


சீனா உள்ளிட்ட 5 நாடுகளின் புதிய தூதுவர்கள் நியமனங்களைக் கையளிப்பு!
[Tuesday 2018-01-23 17:00]

இலங்கைக்கான 5 புதிய தூதுவர்கள் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமது நியமனக் கடிதங்களை கையளித்துள்ளனர். சூடான், வியட்நாம், மியன்மார், கொரியா மற்றும் சீன நாட்டின் தூதுவர்களே புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


வடமராட்சியில் தெருநாய் கடித்த சிறுவன் மரணம்!
[Tuesday 2018-01-23 17:00]

வடமராட்சி பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் நீர்வெறுப்பு நோயால் இன்று காலை மரணமடைந்துள்ளார். தெரு நாய் ஒன்று, வீட்டிற்குள் நுழைந்து, குறித்த சிறுவன், அவனது தாய் மற்றும் சகோதரியையும் கடித்துள்ளது. இதனையடுத்து, இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தநிலையில், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு நீர்வெறுப்பு நோய் ஏற்பட்டுள்ளமை தெரியவந்தது.


ஆனைக்கோட்டை மூதாட்டியை அடித்துக் கொலை செய்த 5 சந்தேக நபர்கள் கைது!
[Tuesday 2018-01-23 17:00]

ஆனைக்கோட்டை பகுதியில், தனிமையிலிருந்த மூதாட்டியை அடித்து கொலை செய்து, நகைகளை அபகரித்த சம்பவம் தொடர்பில், 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான ஐவரும் யாழ்.ஆறுகால்மடம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், 22 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் மானிப்பாய் பொலிஸார் கூறினர்.


சிங்கப்பூர்- இலங்கை இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து! Top News
[Tuesday 2018-01-23 17:00]

இலங்கை வந்துள்ள சிங்கப்பூர் பிரதமர் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.


நாடாளுமன்றத்தில் இன்று அறிக்கைகள் தாக்கல் - மீண்டும் வெடிக்கும் பூகம்பம்?
[Tuesday 2018-01-23 08:00]

ஊழல், மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை நடத்திய இரண்டு ஆணைக்குழுக்களின் அறிக்கைகளும் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன என்று பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்த விசாரணை அறிக்கையும், மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகள், ஊழல்கள் குறித்து விசாரித்த ஆணைக்குழுவின் அறிக்கையுமே இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.


பொப்பிசைச் சக்கரவர்த்தி ஏ.இ மனோகரன் காலமானார்!
[Tuesday 2018-01-23 08:00]

சுராங்கனி புகழ், பொப்பிசைச் சக்கரவர்த்தி ஏ.இ மனோகரன் சென்னை- திருவான்மையூர், கந்தன்சாவடியில் நேற்றிரவு 7.20 மணியளவில் காலமானார். இலங்கையில் பொப்பிசைத்துறையில் பிரபல்யமான பாடகராகத் திகழ்ந்த இவர், இலங்கையின் தமிழ் பொப்பிசையை உலக அளவில் எடுத்துச் சென்ற பெருமைக்குரியவராகத் திகழ்ந்தார்.


சுவிசில் தஞ்சம் கோரும் இலங்கையர்களின் எண்ணிக்கை குறைந்தது!
[Tuesday 2018-01-23 08:00]

சுவிற்சர்லாந்தில் அடைக்கலம் தேடுவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு குறைந்துள்ளதாக, சுவிஸ் அரச குடிவரவுச் செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2017ஆம் ஆண்டு சுவிற்சர்லாந்தில் அடைக்கலம் கோரியவர்களின் எண்ணிக்கை, 33.5 வீதத்தினால் குறைந்திருக்கிறது. 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் அடைக்கலம் கோருவோர்களிடம் இருந்து ஆகக் குறைந்த விண்ணப்பங்கள் கடந்த ஆண்டிலேயே கிடைத்துள்ளன.


மகிந்த - ரவி இரகசியக் கூட்டு?
[Tuesday 2018-01-23 08:00]

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் இடையில் இரகசிய தொடர்புகள் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.கண்டியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.


வாழைக்குலையுடன் சந்தைக்குச் சென்றவரை பந்தாடியது கன்டர்! Top News
[Tuesday 2018-01-23 08:00]

மோட்டார் சைக்கிளில் வவுனியா சந்தைக்கு வாழைக்குலை கொண்டு சென்றவர் மீது யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கன்டர் வாகனம் தாண்டிக்குளம் சந்தியில் இன்று காலை மோதியது. இவ்விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா